இரகசியக் காப்பறிக்கை

எங்களது இணையத் தளத்திற்கு விஜயம்செய்து இரகசியக் காப்பறிக்கையைப் பார்வையிட்டதிற்கு நாம் நன்றியைத் தெரிவிக்கின்றோம். இந்த இணைய தளம் www.charityapple.org (“தளம்”) கொழும்பு ரோட்டரக்ட் கழகம், மனிதநேய அமைப்புகளுக்கான கூட்டமைப்பு (CHA) , மற்றும் ‘வொய்ஸ்’ எனப்படும் தன்னார்வப் பணித் தகவல் மற்றும் ஒருங்கிணைத்தலுக்கான மையம் என்பவற்றின் சார்பாக நடாத்தப்படுகிறது (“சரிட்டிஅப்பிள்”, “நாம்”, “நாங்கள்”, மற்றும் “எங்கள்”). உங்களது தனிப்பட்ட அந்தரங்கம் எங்களுக்கு முக்கியமானது.. உங்களது தனிப்பட்ட தகவல்களை (கீழே வரையறை செய்தது போன்று) பாதுகாப்பதென்பதோடு இந்த இரகசியக் காப்பறிக்கைக்கு அமைவாக அவற்றைப் பயன்படுத்துவதும் எங்கள் கொள்கையாகும். இந்த இரகசியக் காப்பறிக்கையானது தொடரறா சேவையில் நாம் திரட்டும் தகவல்கள் தொடர்பான தனிப்பட்ட நடைமுறைகளை மட்டுமே உள்ளடக்கு கின்றது.  தளம் மற்றும் சேவைகள் மீதான உங்களின் பயன்படுத்தலானது எங்களது தளத்தின் ஆரம்பப் பக்கத்திலிருந்து (Home Page) நீங்கள் அணுகக் கூடிய நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு அல்லது ஏனைய தளப் பக்கங்களில் நியதிகள் மற்றும் நிபந்தனைகளின் மேல் கிளிக் செய்வதன் மூலம் அல்லது அழுத்துவதன் மூலம் அவற்றுக்கும் உட்பட்டது என்பதை தயவு  செய்து கவனத்தில் கொள்ளவும்.

1. உங்களிடமிருந்து நாம் திரட்டும் தகவல்கள்

ஏனைய இணையதளங்கள் போலவே கீழ் வருவன போன்ற உங்களது இணையத் தொடர்புகள் பற்றிய தகவல்களை தன்னிச்சையாக நாம் திரட்டிக் கொள்கிறோம்:

  • இணையதளத்தை அணுகுவதற்கு நீங்கள் பயன்படுத்திய சேவையகத்தின் (server)  IP  முகவரி;
  • எங்கள் தளத்திற்கு நேரடியாக நீங்கள் இணைந்த வலைக் கடப்பிடத்தின் (website) பெயர்;
  • எங்கள் தளத்தை நீங்கள் அணுகிய திகதியும், நேரமும்; அத்துடன்,
  • நீங்கள் விஜயம் செய்யும் பக்கங்கள்.

இந்தத் தகவல் (“தனிப்பட்ட ரீதியிலானவையல்லாத தகவல்கள்”) உங்களை தனிப்பட்ட வகையில் இனம் காணாது.  தளத்தின் வினைத்திறனைக் கண்காணித்தல், விருப்பிற்குரிய பகுதிகளை இனம் காணுதல் என்பதற்கும், தளத்திற்கு சாத்தியமான மேம்படுத்தல்களைக் கவனத்தில் கொள்வதற்கும் இந்த தனிப்பட்ட ரீதியிலானவையல்லாத தகவல்களை நாம் பயன் படுத்துவோம்.

தளத்தின் சில அம்சங்கள் மற்றும் செயற்பாடுகள் என்பவற்றை நீங்கள் பயன்படுத்துவதற்கென தெரிவு செய்தால் தனிப்பட்ட வகையில் இனம் காணக்கூடிய சில தகவல்களை ( “தனிப்பட்ட தகவல்கள்”) வழங்கும்படி நாம் வேண்டுவோம்.  இந்தத் தகவல்களின்றி இந்த அம்சங்கள் செயற்பட முடியாது. அத்தகைய தகவல்களை வழங்குவதன் மூலம் இரகசியக் காப்பறிக்கையில் விபரிக்கப்பட்டது போன்று தகவல்களைத் திரட்டி நாம் பயன்படுத்துவதற்கு நீங்கள் சம்மதிக்கிறீர்கள்.  எங்களது தளத்திற்கு நீங்கள் விஜயம் செய்யும் போது உங்களைப் பற்றிய  ஏதேனும் தகவல்களை நீங்கள் வழங்கினாலன்றி அவற்றை நாம் திரட்டுவதில்லை.

நீங்கள் வழங்கும் தனிப்பட்ட தகவல்களானது, தொடர்பு கொள்ளும் தகவல்கள், உங்களது பெயர், ஸ்தாபனத்தின் பெயர், முகவரி, மின்னஞ்சல் முகவரி மற்றும் உங்களது ஆர்வங்கள், விருப்பங்கள் என்பவை பற்றிய தகவல்கள் உட்பட  ஏதேனும் பதிவு செய்தலின் போது வழங்கப்பட்ட தகவல்களை உள்ளடக்குகின்றது.  கலந்துரையாடல் குழுக்கள் அல்லது ஏனைய விவாதங்கள் என்பவற்றில் கலந்து கொள்ளும்  போது நீங்கள் தன்னிச்சையாக சமர்ப்பித்த ஏதேனும் தகவல்களையும் நாம் சேகரிக்கின்றோம். எங்களது தரவுத் தளங்களிலொன்றில் சேர்த்துக் கொள்ளப் படுவதற்காக தகவல்களை நீங்கள் சமர்ப்பித்திருந்தால் அல்லது தகவல்களைப் பதிவு செய்திருந்தால் உங்களது தனிப்பட்ட தகவல்கள் பொதுமக்களுக்கும் கிடைக்க்க் கூடியதாக இருக்குமென்பதை தயவு செய்து கவனத்தில் கொள்ளவும்.

2. உங்களது தனிப்பட்ட தகவல்களின் பயன்பாடு

நீங்கள் வேண்டிக் கொள்கின்ற சேவைகளை வழங்குவதற்கும்; உங்களது கேள்விகள் அல்லது விசாரணைகள் என்பவற்றுக்கு பதிலிறுப்பதற்கும்;  பயன்படுத்துவோரின் விருப்பிற்குரிய விடயங்களை இனம் காண்பதற்கும்;  எங்களது தளத்தில் சாத்தியமான மேம்படுத்தல்களை கவனத்தில் கொள்வதற்கும் மற்றும் தன்னார்வப் பணியாளர்கள் மற்றும் இலாப நோக்கற்ற ஸ்தாபனங்கள் என்பவற்றை ஒருங்கிணைப்பதற்கான ஒரு அரங்கை வழங்குவதற்குமாக உங்களிடமிருந்து பெறப்படுகின்ற தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்துகின்றோம்.

நாங்கள் தகவல்களைப் பயன்படுத்தும் பிரத்தியேகமான வழிகள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன:

  • எங்களது தளத்தில், “எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்” எனும் பிரிவிலிலுள்ள பின்வரும் இணைப்புகள் மூலம் சேவைகள் தொடர்பான கேள்விகள் அல்லது குறிப்புகள் என்பவற்றுடன் அல்லது மேலதிக தகவல்களை வேண்டி நேரடியாக நீங்கள் எம்மைத் தொடர்பு கொள்ள முடியும்.  இந்த இணைப்புகள் உங்களின் சில தனிப்பட்ட தகவல்களை வழங்குவதற்கு தேவைப்படுத்தும், இதன் மூலம் உங்கள் விசாரணைகளுக்கு எம்மால் பதிலளிக்கக் கூடியதாக இருக்கும்.
  • விநியோகத் தேவைகளுக்காக எங்களிடமிருந்து விடயப் பொருட்களை வேண்டுவீர்களாக இருந்தாலும், உங்களது தனிப்பட்ட தகவல்களை நீங்கள் வழங்குதல் வேண்டும்.  நாங்கள் வழங்கும் சேவைகள் மீதான ஆர்வத்தின் மட்டத்தினைத் தீர்மானிப்பதற்கும் உங்களது தனிப்பட்ட தகவல்களை நாம் பயன்படுத்தலாம்.

தொடரறா சேவைகளுக்கான உங்களது வேண்டுகோள்கள் அல்லது நீங்கள் கேட்டுக் கொண்ட மேலதிக தகவல்கள் என்பவை பற்றிய நிலை தொடர்பாக உங்களுடன் தொடர்பு கொள்வதற்கும் உங்களது தனிப்பட்ட தகவல்களை நாம் பயன்படுத்தலாம். நீங்கள் வேண்டிக் கொண்ட தொடறரா சேவைகள் ஏதேனுக்கும் நீங்கள் தகுதியுடையவராவீர்களா என்பதைத் தீர்மானிப்பதற்கும் உங்களது தனிப்பட்ட தகவல்களை நாம் பயன்படுத்தலாம்.

  • மேலதிக சேவைகள் அல்லது அம்சங்கள் தொடர்பாக உங்களைத் தொடர்பு கொள்வதற்கு அல்லது தளத்துடனான உங்களது அனுபவங்கள் பற்றிய பின்னூட்டல்களைக் கேட்டுக் கொள்வதற்காகவும் உங்களது தனிப்பட்ட தகவல்களை நாம் பயன்படுத்தலாம்.

 

3. இணைப்புகள்

விருப்பிற்குரிய ஏனைய தளங்களின் இணைப்புகளை எங்கள் தளத்தில் நாம் வழங்குகின்றோம்.  இந்தத் தளங்களின்  உள்ளடக்கங்கள் பற்றி நாம் உறுதிப் படுத்தமாட்டோம் என்பதுடன் இந்த இரகசியக் காப்பறிக்கையை அவை கடைப்பிடிக்குமென நாம் உத்தரவாதமளிக்கவும் மாட்டோம். அத்தகைய இணைப்புத் தளங்களை  அவற்றின் வழங்குனர்களின் நியதிகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் அந்தரங்கக் கொள்கை என்பவற்றுக்கு உட்பட்டே நீங்கள் அவற்றைப் பயன்படுத்துகிறீர்கள். எங்களது தளத்தை விட்டு தனிப்பட்ட தகவல்களைத் திரட்டும் ஒவ்வொரு தளத்தினதும் தனிப்பட்ட இரகசியக் காப்பறிக்கையை வாசிப்பது பற்றி பயன்படுத்துபவர்கள் அறிந்திருப்பதற்கு நாம் ஊக்குவிக்கின்றோம்.

4. உங்களது தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுதல்

சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் அல்லது தகவல் தரகர்கள் அல்லது வேறு ஏதேனும் ஸ்தாபனம் அல்லது தனிப்பட்டவர்களுக்கு உங்களது தனிப்பட்ட தகவல்களை நாம் விற்க அல்லது வர்த்தகப்படுத்த அல்லது வழங்வோ மாட்டோம். கீழ்வரும் சந்தர்ப்பத்தில் மட்டுமே உங்களது தனிப்பட்ட தகவல்களை நாம் வெளிப்படுத்துவோம்.

  • வேறு எந்தத் தளத்தையும் போல, சில வகையான சட்ட நடைமுறைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக உங்களது தனிப்பட்ட தகவல்களை வழங்குவதற்கு நாம் வேண்டப்படலாம்.

 

5. குக்கிகளின் (Cookies) பயன்பாடு

குக்கிகளின் பயன்பாடானது தளத்திற்கான உங்களது விஜயங்களை அதிகப் படுத்துவதற்கு எங்களை இயலச் செய்கின்றது.  குக்கிகள் எனப்படுபவை எண்ணெழுத்துக்களை (alphanumeric) இனம் காணுமொரு மென்பொருளாகும்.  இது, உங்களது வலை மேலோடி (web browser) மூலம் உங்களது கணினியின் வன்செலுத்திக்கு (hard drive) மாற்றப்படும். மேலோடிகள் (browser) அநேகமானவற்றின் மீதுள்ள கருவிப் பட்டையின் (tool bar) உதவிப் பகுதி, உங்களது மேலோடி புதிய குக்கிகளை ஏற்றுக் கொள்வதை எப்படித் தவிர்த்துக் கொள்வது எனக் கூறும், ஆனால் இது சில அம்சங்களைப் பயன்படுத்துவதற்கான உங்களது இயல்தன்மையை மட்டுப்படுத்தும். குக்கிகள் உங்களது மேலோடியை இனம் கண்டு, உங்களது தேவைகளுக்காக அமைக்கப்பட்ட அம்சங்களை வழங்குவதற்கு எம்மை இயலச் செய்கிறது.

திட்டமிடுதல் மற்றும் தடம் தொடர்வது (tracking), அது போன்று தளத்தின் தொழில்நுட்பச் செயற்பாடுகளை மதிப்பீடு செய்வது போன்ற நோக்கங்களுக்காக குக்கிகளிலிருந்தான தகவல்களை நாம் பயன்படுத்தலாம். தளம் அல்லது எங்களது உள்ளடக்கம் என்பவற்றின் வினைத்திறனைக் கணிப்பதில் எங்களுக்கு உதவுவதற்கு தளத்தில் எந்தப் பக்கங்களுக்கு நீங்கள் விஜயம் செய்கிறீர்கள் என்பது பற்றிய தகவல்களைத் தடம் தொடரவும்  குக்கிகளை நாம் பயன்படுத்தலாம்.

6. சிறுவர்கள் மற்றும் பெற்றோர்கள்

நீங்கள் பதினைந்து (15) வயதிற்கு கீழ்பட்டவராயின், நீங்கள் உங்களது பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர் ஆகியவர்களுக்கு தெரிந்த வகையிலேயே தளத்தைப் பயன்படுத்துவதற்கு நாம் ஊக்கப்படுத்துகிறோம்.  நீங்கள் வழங்கும் ஏதேனும் தகவல்கள் இந்த இரகசியக் காப்பறிக்கையின் கொள்கைகளுக்கமைவாகக் கையாளப்படும்.

7. தகவல்களை வழங்குதல் மற்றும் பெறுதல்

எந்த வேளையிலும் தகவல்களை வழங்காதிருப்பதற்கும் அல்லது எங்களிடமிருந்து தொடர்பாடல்களைப் பெறாதிருப்பதற்கும் நீங்கள் தீர்மானிக்கலாம். பயன்படுத்துவோர்கள் பின்வரும் தெரிவுகள் ஒன்றின் மூலம் எங்களுக்கு அவற்றைத் தெரிவிக்கலாம்:

உங்களது கரிசனைகள் பற்றி எங்களுக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.
தொலைபேசி இல: 0094 – 011 – 4610943 இணைப்பு 137
தபால்: சரிட்டிஅப்பிள் செயல் திட்ட ஒருங்கிணைப்பாளர்,
மனிதநேய அமைப்புகளுக்கான கூட்டமைப்பு,
86,ரோஸ்மீட் பிளேஸ்,
கொழும்பு – 07
இலங்கை..

8. இந்தக் காப்பறிக்கைக்கான மாற்றங்கள்

இந்தக் காப்பறிக்கையை காலத்திற்கு காலம் நாம் மாற்றலாம். மாற்றமொன்றை நாம் மேற்கொண்டால் திருத்திய காப்பறிக்கையை இந்த்த் தளத்தில் நாம் பதிவு செய்வோம். இந்தக் காப்பறிக்கையை காலத்திற்கு காலம் கிரமமாக மீளாயும்படி நாம் உங்களை ஊக்குவிக்கிறோம். எங்களது தனிப்பட்ட அந்தரங்க்க் கொள்கைகள் பற்றிய கேள்விகள், குறிப்புகள் அல்லது முறைப்பாடுகள் என்பன மேற்குறிப்பிட்ட முறைகளொன்றின் மூலம் எங்களுக்கு சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.


சேவைகளின் நியதிகளும் நிபந்தனைகளும்


 



Copyright © 2009 charityapple.org. All rights reserved