சேவைகளின் நியதிகளும் நிபந்தனைகளும்
1. நியதிகளை ஏற்றுக் கொள்ளுதல்
கொழும்பு ரோட்டரக்ட் கழகம், மனிதநேய அமைப்புகளுக்கான கூட்டமைப்பு, மற்றும் “வொய்ஸ்” எனப்படும் தன்னார்வப் பணித்தகவல் மற்றும் ஒருங்கிணைப்பு மையம் என்பவற்றால் வழங்கப்படும் www.charityapple.org எனும் இணையதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இந்தச் சேவையின் நியதிகளும் நிபந்தனைகளும் காலத்திற்குக் காலம் சரிட்டிஅப்பிளினால் இற்றைப்படுத்தப்படுவது போன்று இந்தத் தளம் மற்றும் சேவைகள் என்பவற்றின் மீதான உங்கள் பயன் படுத்துதலையும் அது நிர்வகிக்கிறது. நீங்கள் தளம் அல்லது சேவையைப் பயன்படுத்துவதற்கு முன் நியதிகள் மற்றும் நிபந்தனைகளைக் கவனமாக வாசித்து அறிந்து கொள்ளுதல் வேண்டும். எந்தவேளையிலும் www.charityapple.org என்னும் முகவரியில் நியதிகள் மற்றும் நிபந்தனைகளின் மிகவும் சமீபத்திய வடிவத்தை நீங்கள் பார்வையிடலாம். தளம் அல்லது சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்குக் கட்டுப்படுவதற்கு இணங்குவதுடன் நீங்கள் குறைந்தது, பதினாறு (16) வயதுடையவராக அல்லது உங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் அனுமதியை கொண்டுள்ளதாகவும் நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். இது, சட்டபூர்வமாக பணிக்குந் தன்மையுடனான ஒரு ஒப்பந்தமாகும். நியதிகள் மற்றும் நிபந்தனைகளுடன் நீங்கள் இணங்குவதற்கு விரும்பவில்லையாயின், நீங்கள் இத்தளத்தை அல்லது அதன் சேவையைப் பயன்படுத்துதல் கூடாது.
2. சேவைகள்
இந்த இணையதளம் (i) இலங்கையிலுள்ள இலாப நோக்கமற்ற மற்றும் சமூக ஸ்தாபனங்கள்; மற்றும் (ii) இலங்கையில் தன்னார்வப் பணி வாய்ப்புக்கள் மற்றும் நிகழ்வுகள் என்பவற்றை உள்ளடக்கியதொரு ஸ்தாபனங்களின் தரவுத்தளம் (Data base) என்பவற்றைக் கொண்டுள்ளது. உங்களுடையது ஒரு ஸ்தாபனமாக இருந்தால் ஸ்தாபனத் தரவுத்தளத்தில் களஞ்சியப்படுத்தக் கூடிய தன்னார்வப் பணி வாய்ப்புக்கள், நிகழ்வுகள் அல்லது ஏனைய சம்பந்தப்பட்ட தகவல்களை நீங்கள் சமர்ப்பிக்கலாம்.
ஸ்தாபனத்தின் தரவுத்தளம் கொண்டுள்ள தகவல்களை எவரும் தேடி அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும். தன்னார்வப் பணியாளர்களைப் பரீட்சித்தல், ஆட்சேர்த்தல், தெரிவு செய்தல் மற்றும் முகாமைத்துவம் செய்தல் என்பவற்றுடன் இந்தச் செய்முறைகளுடன் சேர்ந்ததான வேறு ஏதேனும் நடைமுறைகளுக்கு ஸ்தாபனங்களே முழுமையான பொறுப்பினைக் கொண்டிருக்கும்.
தனிப்பட்டவர்கள், இந்தத் தளத்தில் ஸ்தாபனங்களால் பதிவு செய்யப்பட்ட தன்னார்வப் பணி வாய்ப்புகள், நிகழ்வுகள் மற்றும் வளங்கள் என்பவை பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு இத்தளத்தினைப் பயன்படுத்தலாம். இந்தத் தளம், ஒவ்வொருவரினதும் விருப்புகளுக்கு ஏற்றவாறு தனிப்பட்டவர்களை ஸ்தாபனங்களுடன் இணைத்து வைக்காது. தனிப்பட்டவர்கள் தன்னார்வப் பணி அல்லது மேலதிக தகவல்களைப் பெறுவதில் ஆர்வம் கொண்டிருப்பின், அவர்கள் சம்பந்தப்பட்ட ஸ்தாபனத்துடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளுதல் வேண்டும்.
இந்த இணையதளத்தில் அல்லது அதனூடாக தகவல்களை அளித்தல், தரவுத் தளங்கள் மற்றும் ஏனைய சேவைகள் என்பன இந்த நியதிகள் மற்றும் நிபந்தனைகளில் கூட்டாக “சேவைகள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளன.
3. சேவைகளைப் பயன்படுத்துதல்
இந்தத் தளம் மற்றும் சேவைகளைப் பயன்படுத்துவதற்கு உலகளாவிய வலையமைப்பை (Worldwide Web) அணுகுவதற்கான வழிமுறைகள் உங்களுக்குத் தேவையென்பதுடன், உலகளாவிய வலையமைப்பை பயன்படுத்துவதுடன் தொடர்புபட்ட செலவுகளுக்கு நீங்களே பொறுப்புடையவர் ஆவீர்கள். www.charityapple.org எனும் இத்தளம் தனது இணையதளத்தை அல்லது அதனுள்ளிருக்கும் இணைப்புகளைப் பயன்படுத்துவதற்கு கட்டணம் எதனையும் அறவிடமாட்டாது.
4. பதிவு செய்வதற்கான தேவைப்பாடுகள்
சில சேவைகளைப் பயன்படுத்துவதற்கு நீங்கள் இந்தத் தளத்துடன் பதிவு செய்து கொள்ளல் வேண்டுமென்பதுடன் சில தகவல்களையும் வழங்குதலும் வேண்டும். அத்தோடு ஒரு கடவுச் சொல்லையும் (password) உருவாக்கிக் கொள்ளுதல் வேண்டும். உங்களது கடவுச்சொல்லை தனிப்பட்ட அந்தரங்கத்திற்குரியதாகப் பேணுவதற்கும் அத்துடன் உங்களது கடவுச் சொல்லை பிறிதொரு நபர் அல்லது அமைப்பு பயன்படுத்துவதற்கு இயலச் செய்தல் அல்லது அனுமதித்தல் என்பவற்றின் விளைவால் ஏற்படுகின்ற ஏதேனும் செயற்பாடுகளுக்கு பொறுப்புள்ளவராக இருப்பதற்கும் நீங்கள் இணங்கிக் கொள்கிறீர்கள். (i) உங்களது கடவுச்சொல்லை நீங்கள் முற்றிலுமாக மறந்து விட்டால் அல்லது அது களவாடப்பட்டிருந்தால், அல்லது (ii) உங்கள் கடவுச் சொல்லின் அனுமதிக்கப்படாத ஏதேனும் பயன்பாடு அல்லது சேவையைப் பாதிக்கக்கூடிய வகையில் பாதுகாப்பு முறைகளில் ஏதேனும் மீறுதல்கள் பற்றி அறிய வருதல் ஆகிய ஏதேனும் சம்பவங்களின்போது கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முறைகள் ஏதேனும் ஒன்றின் மூலம் சரிட்டிஅப்பிளுக்கு அறியத் தரவேண்டிய பொறுப்பை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள். இந்தப் பிரிவின், இந்த ஏற்பாடுகளுடன் இணங்கத் தவறுவதிலிருந்து எழுகின்ற ஏதேனும் இழப்பு அல்லது நஷ்டங்களுக்கு w பொறுப்புடையதாகமாட்டாது.
நீங்கள் கீழ்வரும் முறைகள் மூலம் தொடர்பு கொள்ளலாம்:
மின்னஞ்சல்: உங்களது கரிசனைகள் பற்றிய மின்னஞ்சல் ஒன்றை அனுப்பவும். charityapple@cha.lk
தொலைபேசி இல: 0094-011-4610943 இணைப்பு: 137
தபால்:
சரிட்டிஅப்பிள் செயல்திட்ட ஒருங்கிணைப்பாளர்,
மனிதநேய அமைப்புகளுக்கான கூட்டமைப்பு,
86, றோஸ்மீட் பிளேஸ், கொழும்பு 7,
இலங்கை.
உங்களிடமிருந்து கிடைக்கப் பெறும் தகவல்கள் சரிட்டிஅப்பிளின் தனிப்பட்ட அந்தரங்கக் கொள்கைக்கமைவாக மட்டுமே பயன்படுத்தப்படும்
5. வழங்கப்படும் சேவைகள்
சேவைகளைப் பயன்படுத்துவதில் சில ஆபத்துக்களுக்கான வாய்ப்புகள் உள்ளனவென்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். இதனை நீங்கள் சேவைகளைப் பயன்படுத்தும்போது ஏற்றுக் கொள்வீர்கள். குறிப்பாக, தளம் மற்றும் சேவைகள் (“உள்ளடக்கம்”) தொடர்பில் வழங்கப்படும அனைத்துத் தகவல்கள், தரவுகள் மற்றும் வேறு விடயங்கள் என்பன அத்தகைய உள்ளடக்கங்களை வழங்கும் நபர் அல்லது அமைப்பினது பொறுப்பாக இருக்கும் என்பதை நீங்கள் புரிந்து இணங்கிக் கொள்கிறீர்கள். சேவைகளின் ஓர் பகுதியாக வழங்கப்படும் அத்தகைய உள்ளடக்கங்களைப் பரிசீலித்துப் பார்ப்பதற்கு அல்லது மீளாய்வதற்கு சரிட்டிஅப்பிள் பொறுப்பெதனையும் ஏற்கவில்லையென்பதை நீங்கள் புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்கிறீர்கள். தளத்தில் இருக்கின்ற அல்லது சேவைகளின் பயன்பாட்டினூடாக இருக்கின்ற உள்ளடக்கங்கள் ஏதேனையும் மறுப்பதற்கு, கண்காணிப்பதற்கு அல்லது அகற்றுவதற்கு முழுமையான தற்றுணிபு அதிகாரத்திற்கான உரிமையை சரிட்டிஅப்பிள் கொண்டுள்ள அதேவேளை அதற்கானதொரு கடப்பாட்டினை அது கொண்டிருக்கவில்லை. தரவுத்தளங்களில் உள்ளடங்கியுள்ள தகவல்களின் தரம், துல்லியத்தன்மை அல்லது சட்டபூர்வத்தன்மை என்பன உட்பட்ட தகவல்களின் எந்தவொரு அம்சத்தையும் சரிட்டிஅப்பிள் உறுதிப்படுத்தாது. தகவல்களை சமர்ப்பிப்பவர் எவரினதும் அடையாளத்தை சரிட்டிஅப்பிள் உறுதிப்படுத்துவதில்லையாதலால் ஏதேனும் தகவல் அல்லது அடையாளம் சரியானவையென சரிட்டிஅப்பிள் உத்தரவாதமளிக்காது. உள்ளடக்கங்கள் மீளாய்வு செய்யப்பட்டது அல்லது செய்யப்படவில்லை என்பதிலான அனைத்துப் பொறுப்புக்கள் அல்லது கடப்பாடு என்பவற்றை உங்களுக்கு அல்லது வேறு யாரேனும் நபருக்கு அல்லது அமைப்புக்கு சரிட்டிஅப்பிள் திட்டவட்டமாக மறுக்கின்றது. சரிட்டிஅப்பிள், அது தெரிவு செய்யும் ஏதேனும் உள்ளடக்கத்தை எந்தவேளையிலும், எந்தவொரு காரணத்திற்காகவும் உங்களுக்கோ அல்லது வேறு ஏதேனும் மூன்றாம் தரப்பிற்கோ முன்னறிவித்தலோ அல்லது கடப்பாடின்றி அகற்றுவதற்கு அல்லது இல்லாது செய்வதற்கான உரிமையைக் கொண்டுள்ளது. ஏதேனும் அல்லது அனைத்து உள்ளடக்கங்களையும் பயன்படுத்துவதோடு இணைந்துள்ள அபாய வாய்ப்புகள் அனைத்தையும் நீங்கள் ஏற்பதாக இணங்கி ஒப்புக் கொள்கிறீர்கள்.
சரிட்டிஅப்பிள் தனிப்பட்டவர்கள் மற்றும் ஸ்தாபனங்களுக்கிடையிலான தொடர்பு முறைகளில் சம்பந்தப்படாது. உங்களிற்கிடையில் பிணக்குகள் ஏதேனுமிருப்பின், அவற்றைத் தீர்த்து வைப்பதில் உதவுவதற்கு சரிட்டி அப்பிளுக்கு தேவையேதும் இல்லையென்பதை நீங்கள் புரிந்து கொள்ளுதல் வேண்டும். அத்தகைய பிணக்குகள் அல்லது சேவைகளைப் பயன்படுத்துதல் என்பவற்றினால் எழுகின்ற அல்லது ஏதேனும் வகையில் தொடர்புபட்ட, அறிந்தும் அறியாததும், சந்தேகித்ததும் சந்தேகிக்காததும், வெளிப்படுத்தியதும் வெளிப்படுத்தாததுமான ஒவ்வொரு வகை அல்லது தன்மையிலான ஏதேனும் அல்லது அனைத்துக் கோரிக்கைகள், கேள்விகள் மற்றும் சேதங்கள் (உண்மையானதும், பின்னர் ஏற்படுகின்றதுமான என்பவற்றிலிருந்து சரிட்டி அப்பிளை விடுவிப்பதற்கு இத்தால் நீங்கள் இணங்கிக் கொள்கிறீர்கள். சேவைகள் சட்டமுறையிலான நோக்கங்கள் அல்லது தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுமென்பதை நீங்கள் விளங்கிக் கொள்கிறீர்கள் நீங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதற்கான முழுமையான பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறீர்கள். நீங்கள் அணுகுகின்ற சேவைகள் அல்லது அதனூடாகப் பெறுகின்ற அனைத்துத் தகவல்களினதும் துல்லியத் தன்மை, முழுமை நிலை மற்றும் பயனுறுந் தன்மை என்பவற்றை மதிப்பீடு செய்வது உங்களது தனிப்பட்ட முழுமையான பொறுப்பாகும்.,
6. உத்தரவாதங்களை மறுதலித்தல்
தளம் மற்றும் சேவைகள் என்பவற்றைப் பயன்படுத்துவது உங்களது சொந்த தீர்மானத்தின் பேரிலானதாக இருத்தல் வேண்டும். தளம் அல்லது சேவைகள் உங்கள் தேவைகளைத் திருப்திப்படுத்துமென்றோ அல்லது இடையூறு அற்றதாக, நேரத்திற்குரியதாக, பாதுகாப்பானதாக, தற்போதையதானதாக, துல்லியமானதாக, முழுமையானதாக அல்லது பிழையற்றதாக இருக்கும் என்றோ அல்லது தளம் அல்லது சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம் பெறப்படும் பெறுபேறுகள் துல்லியமானதாக அல்லது நம்பிக்கைக்குரியதாக இருக்குமென்றோ எந்தவித உத்தரவாதத்தையும் சரிட்டிஅப்பிள் மேற் கொள்ளாது. தளம் அல்லது சேவைகள் என்பவற்றில் ஏதேனும் குறைபாடு அல்லது திருப்தியின்மை என்பவை தொடர்பில் உங்களுக்குள்ள தனியானதும் மற்றும் பிரத்தியேகமானதுமாக உள்ள சிறந்த பரிகாரம் தளத்தை அல்லது சேவைகளைப் பயன்படுத்துவதை நிறுத்துவதுதான் என்பதை நீங்கள் புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்கிறீர்கள்.
7. பொறுப்புகளை விலக்குதல் மற்றும் மட்டுப்படுத்தல்
(i) தளம் அல்லது சேவைகளைப் பயன்படுத்துதல் அல்லது பயன்படுத்த இயலாமை, (ii) சேவைகளுடன் தொடர்புபட்ட வகையில் அளிக்கப்பட்ட ஏதேனும் இணைப்புகள், (iii) ஏதேனும் சேவைகள் மீதான உங்களது தங்கியிருத்தல்,; (iv) கீழ் குறிப்பிட்ட ஏதேனும் சேவைகளிலான குறுக்கீடுகள், இடைநிறுத்தம், முடிவுறுத்தல், அல்லது (v) தளம் அல்லது சேவைகள் என்பவற்றின் பயன்படுத்தலோடு வேறுவகையில் தொடர்புபட்ட ஏதேனும் விடயங்கள் என்பவற்றிலிருந்து ஏற்படுகின்ற இலாப இழப்பு, நன்மதிப்பு, பயன்பாடு, தரவுகளின் இழப்பு அல்லது ஏனைய இழப்புகள் (அத்தகைய சேதங்களின் சாத்தியம் குறித்து சரிட்டிஅப்பிள் அறிவுறுத்தப்பட்டிருந்தாலும் கூட) என்பவற்றினாலான சேதங்களுக்கு மட்டுப்படுத்தல்களில்லாதது உட்பட ஏதேனும் நேரடியான, மறைமுகமான, தற்செயலான, விசேடமான, பின் விளைவான அல்லது குறிப்பிடத்தக்கதான சேதங்களுக்கு சரிட்டிஅப்பிள் பொறுப்புடையதாக மாட்டாது என்பதை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொண்டு அதனை ஏற்றுக் கொள்கிறீர்கள்.
8. தளம் மீதான கையாளல்
தளம் அல்லது சேவைகளைப் பயன்படுத்தி நீங்கள் மேற்கொள்ளும் தகவல்களின் மேலேற்றுதல், சமர்ப்பித்தல், பதிவு செய்தல், மின்னஞ்சல் செய்தல் அல்லது வேறு வகையில் தகவல் அனுப்புதல் ஆகியவை மூலமான அனைத்து உள்ளடக்கங்களுக்கும் நீங்கள் பொறுப்புள்ளவராவீர்கள். அதேபோன்று, சரிட்டி அப்பிள் மற்றும் மூன்றாம் தரப்பு என்பவற்றின் உரிமைகளை மீறும் வகையில், தளத்தில் காணப்படும் உள்ளடக்கங்களை பதிவிறக்கம், மின்னஞ்சல் செய்யக் கூடாத அல்லது வேறுவகையில் அனுப்பக்கூடாத அத்தகைய உள்ளடக்கங்கள் தொடர்பில் சரிட்டிஅப்பிள் மற்றும் மூன்றாம் தரப்பு என்பவற்றின் உரிமைகளுக்கு மதிப்பளிப்பதற்கும் நீங்கள் பொறுப்புடையவராவீர்கள். தளம் அல்லது சேவையை பின்வரு வனவற்றுக்கு பயன்படுத்தக் கூடாதென்பதற்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்:
- ஏதேனும் ஆக்க உரிமை, வர்த்தகச் சின்னம், வியாபார இரகசியம், பதிப்புரிமை அல்லது ஏனைய புலமைச் சொத்துரிமை, அந்தரங்க உரிமை அல்லது யாரேனும் ஆளின் அல்லது அமைப்பின் விளம்பர உரிமை என்பவற்றை மீறுகின்ற ஏதேனும் உள்ளடக்கங்களை சமர்ப்பித்தல், மேலேற்றம் செய்தல், பதிவு செய்தல், மின்னஞ்சல் செய்தல் அல்லது வேறு வகையில் அனுப்புதல்;
- சட்ட விரோதமான, கெடுதலான, அச்சுறுத்தலான, இழிவான, தொல்லைப்படுத்துவதான, சித்திரவதை செய்கின்றதான, அவதூறு செய்கின்றதான, கீழ்த்தரமான, அநாகரிகமான, மாசு கற்பிக்கின்ற, பாலுணர்ச்சிப் பட ரீதியலான, பாலியலை வெளிப்படுத்தும் வகையிலான, மற்றொருவரின் அந்தரங்கத்தில் தலையீடு செய்கின்றதான, வெறுக்கத் தக்கதான, இனரீதியான, இன மற்றும் கலாச்சார விரோதமான அல்லது வேறுவகையில் விரோதமான ஏதேனும் உள்ளடக்கங்களைச் சமர்ப்பித்தல், மேலேற்றம் செய்தல், பதிவு செய்தல், மின்னஞ்சல் செய்தல் அல்லது வேறுவகையில் அனுப்புதல்;
- இனம், தோற்றம், தேசியம், மதம், மொழி, பால், வயது, பாலியல் நிலை, திருமண அந்தஸ்து அல்லது பதவி நிலை அல்லது வாய்ப்புக்கு உண்மையான தேவைப்பாடாக அல்லது அவசியமான தகுதியாக உடல் ரீதியான அல்லது உளரீதியான இயலுமை என்பவை இருந்தாலன்றி இவற்றின் அடிப்படையில் தனிப்பட்டவர்கள் அல்லது குழுக்கள் அல்லது தனியானதொரு மொழியைப் பாவிப்பவர்கள் ஆகியோருக்கு சமமான வழிவகைகளை வழங்காத வேலைகள், தன்னார்வப் பணி வாய்ப்புகள், உள்ளகத் தொழில் பயிலுனர் வாய்ப்புகள் அல்லது வேறு வாய்ப்புகளைப் பதிவு செய்தல்;
- மட்டுப்படுத்தல்களின்றி சரிட்டிஅப்பிள் பிரதிநிதி ஒருவரை அல்லது அதன் உத்தியோகத்தர்கள், பணிப்பாளர்கள், ஊழியர்கள் அல்லது முகவர்கள் உட்பட மற்றொரு நபர் அல்லது அமைப்பை ஆள் மாறாட்டம் செய்தல், மற்றொரு நபருடனான அல்லது அமைப்புடனான உங்களது தொடர்பை ஏமாற்றும் விதத்தில் உருவகித்தல், தவறாக எடுத்துக் கூறுதல் அல்லது தளம் அல்லது சேவைகளினூடாக அனுப்பப்படும் ஏதேனும் உள்ளடக்கத்தின் மூலத்தை மறைப்புச் செய்யும் வகையில் தலைப்புகளைப் போலியாக உருவாக்கல் அல்லது அடையாளப்படுத்தல்களை மறைத்துக் கையாளுதல்;
- ஏதேனும் வேண்டப்படாததும் அல்லது அனுமதிக்கப்படாததுமான விளம்பரப்படுத்தல்கள், விற்பனை ஊக்குவிப்புப் பொருட்கள் உட்பட ஏதேனும் தேவையற்ற ‘ஸ்பாம்’ (Spam), ‘ஜங் மெயில்’ Junk Mail)
என்பவற்றைச் சமர்ப்பித்தல், மேலேற்றம் செய்தல், பதிவ செய்தல், மின்னஞ்சல் செய்தல் அல்லது வேறுவகையில் அனுப்புதல் அல்லது வேண்டப்படாத தொடர்பாடல்களிலிருந்து ஆட்சேபிக்கப்படுவதற்கு சாத்தியமான வேறு ஏதேனும் விடயங்கள் என்பவற்றை முன்னெடுத்தல் அல்லது அவற்றைத் தொடர்தல்;
- உள்ளூர், தேசிய சட்டங்கள் அல்லது ஒழுங்கு விதிகள் ஏதேனையும் அல்லது வெளிநாட்டு அரசாங்கம் ஏதேனினதும் சட்டம் அல்லது ஒழுங்கு விதி என்பவற்றை மீறும் ஏதேனும் நோக்கம் அல்லது வகையில் தளம் அல்லது சேவைகளைப் பயன்படுத்துதல்;
- நியதிகள் மற்றும் நிபந்தனைகளில் கூறப்பட்டது போன்றும் மற்றும் மூன்றாம் தரப்புகளால் நியாயமானதென எதிர்பார்க்கப்படக்கூடிய சட்டபூர்வமான தொடர்பாடல்களுக்கு தனிப்பட்ட தகவல்களை வழங்குவது எனும் தெளிவான தேவைகளுக்காக என்பது தவிர்ந்த நோக்கங்களுக்காக மூன்றாம் தரப்புகளின் தனிப்பட்ட தரவுகளைத் திரட்டுதல் அல்லது சேமித்து வைத்தல்;
- சரிட்டிஅப்பிள், உங்களை அல்லது மூன்றாம் தரப்பு என்பவற்றை பொருள் ரீதியாக மோசமாகப் பாதிக்கும் ஏதேனும் வகையில் தளம் அல்லது சேவைகளை நேரடியாக அல்லது மறைமுகமாக, வேண்டுமென்றே தடைசெய்தல் அல்லது குறுக்கீடு செய்தல்;
- மென்பொருள் வைரஸ்கள் அல்லது வேறு ஏதேனும் குறி, ஏதேனும் கணினி வன்பொருள், கணினி மென்பொருள் அல்லது தொலைத் தொடர்பு உபகரணங்கள் அல்லது வசதிகள் என்பவற்றைச் செயலிழக்கச் செய்வதற்கு, குறுக்கீடு செய்வதற்கு அல்லது செயற்படுந்தன்மைகளை மட்டுப்படுத்துவதற்கு வடிவமைக்கப்பட்ட அல்லது அறியப்பட்ட கோவைகள் அல்லது செய்நிரல்கள் (programs) என்பவற்றைச் சமர்ப் பித்தல், மேலேற்றுதல், பதிவு செய்தல், மின்னஞ்சல் செய்தல் அல்லது வேறு வகையில் அனுப்புதல்;
- தொலைபேசி இலக்கம்(கள்) அல்லது முகவரிகள், கடன்/பற்று அட்டைகள், அழைப்பு அட்டைகள், கணக்கு இலக்கங்கள், அடையாள அட்டை இலக்கங்கள், கடவுச் சொற்கள் அல்லது அது போன்ற ஏனைய தகவல்கள் உட்பட எவரேனும் மூன்றாம் தரப்பு நபர் அல்லது அமைப்பு தொடர்பான தனிப்பட்ட அல்லது அந்தரங்கமான தகவல்களை சமர்ப்பித்தல், மேலேற்றுதல், பதிவு செய்தல், மின்னஞ்சல் செய்தல் அல்லது வேறு வகையில் அனுப்புதல்;
- தளத்திலிருந்து தகவல்களைத் திரட்ட முயல்வதற்கு ஸ்கிரிப்ட்ஸ், பொட்ஸ் மற்றும் ஏனைய மென்பொருட்கள் உட்பட ஏதேனும் வகையிலான தன்னியக்கக் கருவியை பயன்படுத்தல் அல்லது சேவையகம் (servers) ஏதேனிலும் உடைப்பை ஏற்படுத்துதல்.
9. சேவைகளின் மீள்விற்பனை அனுமதிக்கப்படாது
நீங்கள், சேவைகளைத் தனியே உங்களது சொந்தத் தேவைகளுக்கு பயன்படுத்துவதற்கு மட்டுமே இணங்கினீர்களேயன்றி அச்சேவைகளை ஏதேனும் மூன்றாம் தரப்புக்கு மீளவும் வழங்குவதற்கல்ல. மூன்றாம் தரப்புகளுக்கு வர்த்தக சேவைகள் ஏதேனையும் வழங்குவதற்காக தளம் அல்லது சேவைகளின் ஏதேனும் பகுதியை நீங்கள் பயன்படுத்துதல் அல்லது துஷ்பிரயோகித்தல் கூடாது.
10. உள்ளடக்கங்களுக்கான உரிமை
தளம் மற்றும் சேவைகள் என்பவற்றின் மீதான உங்கள் பயன்படுத்தலானது சரிட்டிஅப்பிளை, அனைத்துத் தகவல்கள் மற்றும் உள்ளடக்கங்களைப் பயன்படுத்தவும், கண்காணிக்கவும், மற்றும் அவற்றின் பிரதிகளைப் பாதுகாத்து வைப்பதற்கும், அத்தகைய தகவல்களை வெளிப்படுத்துவதற்கு சட்டத்தினால் தேவைப்படுத்தப்படுமிடத்து அவ்விதம் செய்வதற்கும் அல்லது அத்தகைய வெளிப்படுத்துதல் சட்டச் செய்முறைகளுடன் இணக்கப்பாட்டை, அல்லது நியதிகள் மற்றும் நிபந்தனைகள் என்பவற்றின் அமுல்படுத்தலை மேம்படுத்தும் எனும் நல்லெண்ணத்தோடும், மூன்றாம் தரப்புகளினது உரிமைகளை உள்ளடக்கம் மீறுவதிலான கோரிக்கைகளுக்குப் பதிலிறுப்பதில் உதவுவதற்கும்,,நபர் எவரேரினதும் தனிப்பட்ட பாதுகாப்பை பாதுகாப்பதற்கும் அல்லது அறிஞர்கள் அல்லது வேறு நபர்கள் எவரேரினதும் அல்லது அமைப்பின் புலமைச் சொத்துரிமையைப் பாதுகாப்பதற்கும் உரித்துடையதாக்குகின்றது என்பதை நீங்கள் புரிந்து கொண்டு இணங்கிக் கொள்கிறீர்கள்.
11. இணைப்புகள்
சேவைகளானது ஏனைய உலகளாவிய வலைத் தளங்களுக்கான இணைப்புகளையும் உள்ளடக்கியிருக்கலாம் அத்தகைய இணைப்புகள் உங்களது சௌகரியத்துக்காக வழங்கப்பட்டுள்ளதுடன் அவை, அத்தகைய இணைப்புத் தளங்களை வழங்குபவர் அல்லது தளத்தின் தரம், நம்பகத்தன்மை அல்லது அத்தகைய இணைப்புத் தளத்தின் ஏதேனும் ஏனைய தன்மை அல்லது அம்சம் என்பவை தொடர்பில் சரிட்டிஅப்பிளாலான ஏதேனும் உறுதிப்படுத்தலைப் பிரதிபலிக்காது. அத்தோடு இணைப்புத் தளத்தில், அதனூடான அத்தகைய ஏதேனும் இணைப்புத் தளத்தில் வழங்கப்பட்ட உள்ளடக்கம் அல்லது அதில் உங்களது தங்கியிருத்தல் உட்பட இணைப்புத் தளத்தில் சேர்ந்துள்ள ஏதேனும் விடயங்களுக்கு (நீங்கள் அடையக்கூடிய ஏதேனும் இழப்பு அல்லது சேதம் தொடர்பிலானவை உட்பட) சரிட்டிஅப்பிள் எந்த விதத்திலும் பொறுப்புடையதாகாது.ஏதேனும் இணைப்புத் தளத்தைப் பயன்படுத்துவது உங்களது சொந்த தீர்மானத்திலானதாக இருத்தல் வேண்டும். சரிட்டிஅப்பிள் ஏதேனும் இணைப்புத் தளம் தொடர்பில் எந்த வித பிரதிநிதித்துவங்கள் அல்லது உத்தரவாதங்களை அளிக்காது. மேலும், ஏதேனும் இணைப்புத் தளத்தைப் பயன்படுத்துதலானது அத்தளத்திற்குப் பிரயோகமாகின்ற நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டே என்பதை நீங்கள் அறிந்திருத்தல் வேண்டும்.
12. இழப்பீட்டு உத்தரவாதம்
சரிட்டிஅப்பிள் மற்றும் அதனுடன் இணைந்தவைகள். அதன் உத்தியோகத்தர்கள், பணிப்பாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியவர்களை மூன்றாம் தரப்புகளின் ஏதேனும் அல்லது அனைத்துக் கோரிக்கைகள், கேள்விக் கோரிக்கைகள் நடவடிக்கைகள் மற்றும் இழப்புகள், பொறுப்புகள்,
சேதங்கள், செலவுகள், கொடுப்பனவுகள் மற்றும் சட்டத்தரணியின் கட்டணங்கள், செலவுகள் உட்பட செலவீனங்கள் மற்றும் (அ) தளம் அல்லது சேவைகள் என்பவற்றிலுள்ள ஏதேனும் உள்ளடக்கம், மற்றும் (ஆ) தளம் அல்லது சேவைகளின் நியதிகள் மற்றும் நிபந்தனைகள் என்பவற்றை மீறும் பயன்பாடு என்பவை உட்பட தளம் அல்லது சேவைகளை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படுகின்ற நேரடியான அல்லது மறைமுகமான செலவீனங்கள் என்பவற்றிலிருந்து கெடுதலில்லாமல் பேணுவதற்கும் இழப்பீட்டு உத்தரவாதமளிப்பதற்கும் நீங்கள் இணங்குகிறீர்கள்.
13. தகவல்களின் பதிப்புரிமை
சேவைகளின் உள்ளடக்கம் சரிட்டிஅப்பிள் மற்றும் மூன்றாம் தரப்புகளுக்குச் சொந்தமானவை என்பதுடன் அவை 2003 அம் ஆண்டின் புலமைச் சொத்துச் சட்ட இல: 36 மற்றும் ஏனைய நாடுகளின் பதிப்புரிமைச் சட்டங்களைப் போல் திருத்தப்பட்ட இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏதேனும் வேறு பதிப்புரிமைச் சட்டங்களால் பாதுகாக்கப்பட்டுள்ளது. சில விடயங்கள் அவற்றின் சம்பந்தப்பட்ட உரிமையாளர்களிடமிருந்தான அனுமதி மூலம் பயன்படுத்தப்படுகிறது. நியதிகள் மற்றும் நிபந்தனைகள் என்பவற்றுடனான உங்களது இணக்கப்பாட்டுக்கு உட்பட்ட வகையில் பதிப்புரிமை, வர்த்தகச் சின்னம் மற்றும் ஏனைய உடமையுரிமை அறிவித்தல்களை முழுமையாகப் பேணும் பட்சத்தில் சரிட்டிஅப்பிள் ஒரு தனிப்பிரதியொன்றைப் பார்ப்பதற்கு அல்லது பதிவிறக்கம் செய்வதற்கு அனுமதித்தல் என்பவை தவிர, சரிட்டிஅப்பிளின் எழுத்து மூலமான அனுமதியின்றி வேறு ஏதேனும் வகையில் வரைபுகள், உருவங்கள், பொத்தான்கள் மற்றும் உரைகள் உட்பட சேவைகளின் உள்ளடக்கங்களை பிரதி பண்ணுதலோ, மீள் உருவாக்குதலோ, மீள்பிரசுரித்தலோ, மேலேற்றம் செய்தலோ, பதிவு செய்தலோ, அனுப்புதலோ அல்லது விநியோகித்தலோ கூடாது. உள்ளடக்கத்தை மாற்றியமைத்தல் அல்லது வேறு ஏதேனும் நோக்கத்திற்காகப் பயன்படுத்துதல் என்பன சரிட்டிஅப்பிள் அல்லது மூன்றாம் தரப்புகள் என்பவற்றின் உரிமைகளின் மீறலொன்றாகக் கருதப்படும். இங்குள்ள எதுவும் பதிப்புரிமை, ஆக்கவுரிமை, வர்த்தகச் சின்னம் அல்லது சரிட்டிஅப்பிள் அல்லது மூன்றாம் தரப்புகள் என்பவற்றின் கீழான உட்கிடக்கைகள், சட்டத் தடை அல்லது வேறு
வகையிலான ஏதேனும் அனுமதி என்பவற்றால் வழங்கப்பட்டவையென விளக்கம் கொள்ளல் ஆகாது.
14. வர்த்தகச் சின்னங்கள்
சேவைகளில் காண்பிக்கப்படும் சில பெயர்கள், சின்னங்கள் மற்றும் ஏனைய விடயங்கள் எங்களது அல்லது ஏனைய அமைப்புகளின் வர்த்தகச் சின்னங்கள், வர்த்தகப் பெயர்கள், சேவைக் குறிகள் அல்லது இலச்சினைகள் (“குறியீடுகள்”) என்பவற்றைக் கட்டமைப்பதாக அமைகின்றன. அத்தகைய குறியீடுகள் ஏதேனையும் பயன்படுத்துவதற்கு நீங்கள் அனுமதிக்கப்படவில்லை. அத்தகைய குறியீடுகள் அனைத்தினதும் மற்றும் அவற்றோடு இணைந்துள்ள நன்மதிப்பு என்பவற்றின் சொத்துரிமையானது எங்களுடனும் மற்றும் அல்லது அந்த ஏனைய அமைப்புகளிடமே உள்ளன.
15. நியாயாதிக்கம் மற்றும் அது செயலபடுமிடம்
இந்த உடன்படிக்கை மற்றும் உங்களுக்கும் சரிட்டிஅப்பிளுக்கும் இடையிலான உறவு என்பன, சட்டங்களிலுள்ள முரண்பாடான ஏற்பாடுகளின் அடிப்படைகளின் படியல்லாமல் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் சட்டங்களினாலேயே நிர்வகிக்கப்படும் என்பதோடு உங்களுக்கும் சரிட்டிஅப்பிளுக்கும் இடையிலான ஏதேனும் பிணக்குகள் தொடர்பில் நீதி செயற்படுமிடமாக இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நீதிமன்றங்களே அமைந்திருக்கும் என்தில் நீங்களும் சரிட்டிஅப்பிளும் இணங்கிக் கொள்கிறீர்கள்.
16. மாற்றங்களின் அறிவித்தல்
சரிட்டிஅப்பிள் நியதிகள் மற்றும் நிபந்தனைகளை காலத்திற்கு காலம் மாற்றியமைக்கலாம். அத்தகையதொரு மாற்றம் செய்யப்பட்டால் திருத்தம் செய்யப்பட்ட நியதிகள் மற்றும் நிபந்தனைகளை சரிட்டிஅப்பிள் தளத்தில் பதிவு செய்யும். வழங்கப்படும் சேவைகளை எந்த வேளையிலும் அதிகரிப்பதற்கு அல்லது மாற்றுவதற்கு அல்லது சேவைகளில் ஏதேனையும் அல்லது அனைத்தையும் நிறுத்துவதற்கான உரிமையை சரிட்டிஅப்பிள் கொண்டுள்ளது. தளம் மற்றும் சேவைகள் என்பவற்றின் மீதான உங்கள் பயன்பாட்டினைக் கருத்தில் கொண்டு சரிட்டிஅப்பிள் காலத்திற்கு காலம் மட்டுப்படுத்தல்கள் மற்றும் திருத்திய நடைமுறைகளை ஸ்தாபிக்கலாம் என்பதை நீங்கள் புரிந்து கொண்டு இணங்கிக் கொள்கிறீர்கள்.
17. களஞ்சியப்படுத்தல் தொடர்பான பொது நடைமுறைகள்
தளத்தில் பதிவுகளைப் பேணுவதற்கு அல்லது தளம் அல்லது சேவைகளைப் பயன்படுத்தி அனுப்பப்படுவதற்காக சமர்ப்பிக்கப்படும் ஏதேனும் செய்திகள் மற்றும் ஏனைய தொடர்பாடல்கள் அல்லது ஏனைய உள்ளடக்கங்கள் என்பவை நீக்கப்பட்டமை அல்லது களஞ்சியப்படுத்தப்பட அல்லது காட்சிப்படுத்தத்ப்பட தவறியமை என்பவற்றுக்காக சரிட்டிஅப்பிள் எந்தப் பொறுப்பையும் கொண்டிருக்காது என்பதில் நீங்கள் இணங்கிக் கொள்கிறீர்கள்.
18. முடிவுறுத்தலைப் பதிவு செய்தல்
சரிட்டிஅப்பிள் உங்களுக்கு அறிவித்தல் தராமல் ஏதேனும் காரணத்திற்காக எந்த வேளையிலும் சேவைகளுக்கான உங்கள் பயன்பாட்டை அதிகரிக்கலாம், மாற்றலாம், நீக்கலாம் அல்லது முடிவுறுத்தலாம் சேவைகளிலான ஏதேனும் மாற்றம், இடைநிறுத்தம் அல்லது நிறுத்துதல் என்பவற்றுக்காக சரிட்டிஅப்பிள் உங்களுக்கோ அல்லது ஏதேனும் மூன்றாம் தரப்புக்கோ பொறுப்புடையதாக மாட்டாது. அறிவித்தலின்றி எந்த வேளையிலும் எவரொருவருக்கும் சேவைகளை வழங்க மறுப்பதற்கான உரிமையை சரிட்டிஅப்பிள் கொண்டுள்ளது.
19. நானவிதமானவை
நியதிகள் மற்றும் நிபந்தனைகள் என்பன உங்களுக்கும் சரிட்டிஅப்பிளுக்கும் இடையிலான உடன்படிக்கை முழுவதையும் உருவாக்குவதுடன் தளம் மற்றும் சேவைகள் மீதான உங்களது பயன்பாட்டையும் நிர்வகிக்கின்றது. உங்களிற்கும் சரிட்டிஅப்பிளுக்குமிடையில் முகமை, பங்குடமை, இணைந்ததொழில் முயற்சி அல்லது ஊழியர்-வேலை கொள்வோர் போன்ற உறவு நிலை இல்லை. தளம் அல்லது சேவைகளினூடாக இருக்கின்ற மூன்றாம் தரப்புகளின் உள்ளடக்கம் அல்லது சேவைகளை நீங்கள் பயன்படுத்தும் போது பிரயோகமாக்க் கூடிய மேலதிக நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கும் நீங்கள் உட்படலாம். நியதிகள் மற்றும் நிபந்தனைகளின் ஏதேனும் ஏற்பாடு தகுதியான நியாயாதிக்கம் கொண்ட ஏதேனும் நீதிமன்றத்தால் செல்லு படியற்றதாகக் காணப்படுமாயின், அத்தகைய ஏற்பாட்டின் செல்லுபடியற்ற தன்மையானது நியதிகள் மற்றும் நிபந்தனைகளில் எஞ்சியுள்ள எற்பாடுகளின் செல்லுபடியாகுந் தன்மையைப் பாதிக்கமாட்டாது. நியதிகள் மற்றும் நிபந்தனைகளின் எதேனும் உரிமையை அல்லது ஏற்பாட்டைப் பிரயோகிப்பதற்கு அல்லது அமுல்படுத்துவதற்கு சரிட்டிஅப்பிள் தவறுவது அத்தகைய உரிமையை அல்லது நிபந்தனையை நீக்கிவிடுவதாக அமையாது. ஏதேனும் நியதிச்சட்டம் அல்லது சட்டம் என்பவற்றோடு முரணாக இருந்தாலும் தளம், சேவைகள் அல்லது நியதிகள் மற்றும் நிபந்தனைகள் என்பவை தொடர்’பில் எழுகின்ற ஏதேனும் கோரிக்கை அல்லது வழக்குகளுக்கான காரணம் என்பன அவை ஏற்பட்டதின் பின்னர் ஒரு வருட காலத்தினுள் தாக்கல் செய்யப்படல் வேண்டுமென்பதில் நீங்கள் இணங்கிக் கொள்கிறீர்கள். |