கருத்து ஆவணங்கள்
சட்ட உதவி ஆணைக்குழுவின் தொண்டர்களின் கதைகள்
சட்ட வலுவூட்டலுக்கான தொண்டர்கள்
எ. ஐ. சந்தமாலி - சட்ட வலுவூட்டலுக்கான தொண்டர்
மாத்தறை மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட சில சமூகங்களில் உள்ள சிறுவர்கள் வயோதிபர்கள் மற்றும் வலது குறைந்த மக்களுக்கான சட்ட வலுவூட்டலை வழங்குவதே சந்தமாலியின் தலையீடாக அமைந்திருந்தது. குறித்த சமூகத்தில் பலதரப்பட்ட குழுக்களுடன் ஒரு மாதகாலம் பணியாற்றியதன் மூலம் மதிப்பிட முடியாத அனுபவங்களையும் ஆதரவற்ற தனிநபர்களுடன் வேலைசெய்வதன் மூலம் அதிக உளத்திருப்தியையும் அடைந்துகொண்டதாக அவர் குறிப்பிடுகின்றார்.
“ மக்களுடன் எவ்வாறு வேலை செய்வது என்பது பற்றி அறிந்துகொள்ளவது எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது.
ஏனையவர்களிடமிருந்து உதவியை பெற்றுக்கொள்ள வேண்டிய மக்கள் யார் என்பதை அடையாளங்கண்டுகொள்வதற்கு அது எனக்கு உதவியது என்றே குறிப்பிடுவேன். வலதுகுறைந்த நபர்களுக்கும் என்னால் முடிந்தவர்களுக்கும் என்னால் உதவ முடிந்தது”என அவர் குறிப்பிடுகின்றார்.
வயோதிபர்களின் உரிமைகள் நிலச் சட்டங்கள் முதியோர் சமூகங்களில் கலந்துகொள்வதன் முக்கியத்துவம் மற்றும் வருமானம் ஒன்றைப் பெற்றுக்கொள்தல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தல் மற்றும் வலது குறைந்தவர்களுக்கான அரசாங்க நிவாரண முறைமைகள் தொடர்பாக வழிகாட்டல் என்பவற்றின் மூலமாக இச்சமூகத்தில் பங்களிப்புச் செய்ததாக சந்தமாலி உணர்கின்றார்.
ஹிரன்தி கலதியாவ (சமூகவியல் மாணவி) - சட்ட வலுவூட்டலுக்கான தொண்டர்
தமது பிரச்சினைகளை அடையாளங்காணல் மற்றும் முரண்பாட்டுத் தீர்வூகளைக் காண்பதற்காக வலுவூட்டுதல் என்பவற்றின் ஊடாக கண்டி மாவட்டத்திலுள்ள சமூகம் ஒன்றின் வாய்ப்படற்ற மக்களுக்கு உதவுவதே ஹிரன்தியின் நோக்கமாக அமைந்திருந்தது. இரண்டு மாதகாலமாகத் தான் பெற்றுக்கொண்ட அனுபவம் தனது தொழில் முன்னேற்ற வழிக்கான பங்களிப்பைச் செய்யும் என அவர் நம்புவதோடு பணத்தை ஈட்டுவதற்கான நோக்கத்தையும் தாண்டிய விதத்தில் சந்தோசத்தையும் திருப்தியையும் வழங்கும் அனுபவம் ஒன்றாக தொண்டர் சேவையை அவர் கருதுகின்றார். “ சட்ட வலுவூட்டலுக்கான தொண்டர் செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது சமூகத்துடன் வேலை செய்யூம் வேளையில் நம்பமுடியாத அனுபவங்களை தொண்டர்கள் பெற்றுக்கொண்டார்கள்.
அவர்களின் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு இளம் தொண்டர்களால் தோள்கொடுக்க முடிந்தது. அரச நிறுவனங்களுடனும் அரச சார்பற்ற நிறுவனங்களுடனும் பணியாற்றுவதன் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட அனுபவம் எதிர்காலத்தில் தொண்டர்களுக்கான சிறந்த தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதிலும் உதவியளிக்கும் ”என அவர் குறிப்பிடுகின்றார்;
ரி வி பி யூ அப்சரா
பலபிடிய பிரதேசத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் நுகர்வோர் பாதுகாப்பு பால்நிலை சமூக வேறுபாட்டு ரீதியிலான வலுவூட்டல்கள்வயோதிபர்களை வலுவூட்டுதல் குற்றச்செயல்களினால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாத்தல்இ மற்றம் நில உரிமை சச்சரவுகள் என்பன தொடர்பாக இரண்டு மாதகால விசேட ஆய்வு ஒன்றை அப்சரா மேற்கொண்டார்.
சமூகத் தொடர்பாடல்களின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட அனுபவங்கள் பெறுமதியானதாக அமைந்திருந்ததாகவும் இதன் மூலம் இது வரையில் தான் கற்ற கோட்பாடுகளை நடைமுறைப்படுத்த அல்லது செயற்படுத்த வாய்ப்புக் கிடைத்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இதன் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட அறிவு தனது எதிர்கால தொழிற்துறை நுழைவுகளுக்கு பயனுள்ளதாக அமையும் எனவும் அவர் உணர்கின்றார். “சட்ட வலுவூட்டலுக்கான தொண்டர் செயற்திட்டம் எனக்கு மிகவூம் பெறுமதியூடைய ஒன்றாக அமைந்தது. சமூகத்திலுள்ள மக்களுடன் தொடர்புகளை நான் பேண வேண்டியிருந்தது. எனது ஆற்றல்களை விருத்தி செய்துகொள்வதற்கு உதவும் வகையில் மக்களுடன் தொடர்புகளை வைத்துக்கொள்ளல் மற்றும் அவர்களுடன் செயற்படுதல் என்பது தொடர்பாக எனது ஆழுமையை விருத்தி செய்வதற்கு இது உதவியளித்தது.
இது வரையில் சட்டம் தொடர்பாக நான் கற்றுக்கொண்ட கோட்பாடுகளின் நடைமுறை விடயங்களின் உள்ளரங்கங்களை அறிந்துகொள்வதற்கு இது இயலுமானதாக்கியது”என அவர் குறிப்பிடுகின்றார்.
|