‘சரிட்டிஅப்பிள் பற்றிய குறிப்பு’
தன்னார்வப் பணி அல்லது தொண்டு ஊழியத்துக்கான ஒரு நீண்ட கலாச்சாரத்தை இலங்கை கொண்டுள்ளது. கஷ்டத்திலுள்ள ஒருவருக்கு உதவுவதற்கு முனைவது அல்லது உன்னதமானதொரு பணிக்கு கை கொடுத்தல் என்பது ஓர் கலாச்சார மரபாக உள்ளது. தனிப்பட்டவர்கள் மற்றும் சமூகம் என்பவற்றின் தேவைகளுக்காக நேரம், முயற்சி மற்றும் பொருட்களை அர்ப்பணிப்பதென்பது எங்களது கலாச்சாரத்தில் பொதிந்துள்ளது.
எவ்வாறாயினும், தன்னார்வப் பணி என்பது ஒரு முறைசாரா செயல் முறையாகவே அநேகம் இருப்பதுடன் அதனால், தன்னார்வப் பணியாளர்களின் வழங்கல் மற்றும் தன்னார்வப் பணிகளுக்கான கேள்வி என்பவற்றுக் கிடையில் இடைவெளியொன்று இருந்த வண்ணமேயுள்ளது. சமூகங்கள் மற்றும் ஸ்தாபனங்கள் என்பவற்றில் தன்னார்வச் சேவைகளுக்கான தேவைகள் அதிகமாக உள்ளபோதிலும் தன்னார்வப் பணிசெய்ய விரும்புவர்கள் எப்படி, எங்கே தங்களது சேவைகளை வழங்க முடியும் என்பது பற்றி போதுமான தகவல்களின்றி உள்ளனர்.
எங்களது நோக்கம், தொடரறாத் தளமொன்றைக் (online platform) கருவியாகப் பயன்படுத்துவதன் மூலம் இந்த இடைவெளியை நிரப்புவதாகும். சரிட்டிஅப்பிள், ஸ்தாபனங்கள் மற்றும் சமூகங்கள் என்பன தன்னார்வ ஆதரவிற்கான அவற்றின் தேவைகளைக் கூறுவதற்கு இயலச் செய்கின்றது. அத்தோடு, தனிப்பட்டவர்கள் மற்றும் ஸ்தாபனங்கள் ஆகியன தன்னார்வப் பணி மற்றும் இலங்கையில் அதனுடன் சம்பந்தப்பட்ட நிலைமைகள் தொடர்பான உட்பார்வை மற்றும் அறிவு என்பவற்றை பெற்றுக் கொள்ளக் கூடியதோர் வளமாகவும் சரிட்டிஅப்பிள் செயற்படுகின்றது. தன்னார்வப் பணியில் ஆர்வமுள்ள தனிப்பட்டவர்கள் இலங்கையில் அதற்கான வாய்ப்புகளை நாடும் ஒரு தகவல் மையமாகவும் சரிட்டிஅப்பிள் செயற்படுவதென்பது இங்கு முக்கியமானதாகும்.
தேசிய மட்டத்திலான சமாதானம், நீதியான சமத்துவம் மற்றும் அபிவிருத்தி என்பவற்றுக்கு தன்னார்வப் பணி நிச்சயம் ஒரு பங்கை அளிக்க முடியும் என நாம் உறுதியாக நம்புகின்றோம். சரிட்டிஅப்பிள் இலங்கையில் தன்னார்வப் பணிகளுக்கு வசதியளிப்பதில் அதிகம் நாடப்படுகின்றதும் மற்றும் நன்கு அறியப்பட்ட இணையதளமாகச் செயற்பட வேண்டுமென்பதே சரிட்டி அப்பிளுக்கான எமது தொலை நோக்காகும். |
|