பங்காளிகள் பற்றி

www.charityapple.org ஆரம்பத்தில் கொழும்பு ரோட்டரக்ட் கழகத்தால் ஆரம்பிக்கப்பட்டதுடன் தற்போது இது கொழும்பு ரோட்டரக்ட் கழகம், சி.எச்.ஏ எனப்படும் மனித நேய அமைப்புகளுக்கான கூட்டமைப்பு (Consortium of Humanitarian Agencies) மற்றும் “வொய்ஸ்” எனப்படும் தன்னார்வப் பணித் தகவல் மற்றும் ஒருங்கிணைப்பு மையம் (Volunteerism Information and Coordination Center) என்பவற்றால் பங்களிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கொழும்பு ரோட்டரக்கட் கழகம் பற்றியது

கொழும்பு ரோட்டரக்ட் கழகம் 1969 இல் உருவாக்கப்பட்டது. ரோட்டரக்ட் இயக்கமானது, சர்வதேச ரோட்டரி அமைப்பின் கீழ் பதிவு செய்யப்பட்ட இலாப நோக்கமற்ற ஒரு சமூக சேவை ஸ்தாபனமாகும். இந்த வகையில் கொழும்பு ரோட்டரக்ட் கழகமானது கொழும்பு ரோட்டரிக் கழகத்தின் பொறுப்பின் கீழானதாக அமைகின்றது. ரோட்டரக்ட் கழகம் நான்கு வகையான சேவைகளில் ஈடுபடுகின்றது.

சமூகசேவை எனப்படும், கழக உறுப்பினர்கள் தங்களது தனிப்பட்ட சிறந்த இயலளவுக்கு சமூகத்துக்கு சேவை செய்கின்ற பொதுவான விருப்பு; இளைஞர்களின் அறிவு, திறமைகள் மற்றும் ஆற்றல்கள் என்பவற்றை வலுவூட்டும் ஆளுமை விருத்தி; எல்லைகளை விரிவுபடுத்தி அந்நிய கலாச்சாரங்கள் மற்றும் பாரம் பரியங்களை அறியச் செய்யும் சர்வதேசப் புரிந்து கொள்ளுதல்; மற்றும் உறுப்பினர்கள் ரோட்டரக்ட் செயற்பாடுகளில் ஒற்றுமையாக இணைந்து அவற்றை அனுபவிப்பதற்கான வழிவகைகளை ஏற்படுத்தும் கழக சேவை என்பவை அவையாகும்.

மனிதநேய அமைப்புகளுக்கான கூட்டமைப்பு பற்றியது

மனிதநேய அமைப்புகளுக்கான கூட்டமைப்பு அதன் உறுப்பினர்களுக்கு சேவையாற்றுவதற்காக ஏப்ரல், 1997 இல் ஏற்படுத்தப்பட்டதுடன் அன்றிலிருந்து இலாப நோக்கற்ற துறையில் ஓர் தேசிய சேவை வழங்குனராகவும் இருந்து வந்துள்ளது. இது, இலங்கையிலுள்ள மனிதநேயத் துறைகளின் வளங்கள் மற்றும் பணிகள் என்பவற்றின் பிரதிநிதியாகவும் மற்றும் இலங்கையில் பணியாற்றும் மற்றும் ஆதரவளிக்கும் முகவரமைப்புகளின் ஒன்றிணைந்த அமைப்பாகவும் உள்ளது.

கடந்த பத்து வருடங்களில் மனிதநேய அமைப்புகளுக்கான கூட்டமைப்பு மனிதநேய முகவரமைப்புகளை ஒன்றிணைக்கும் ஓர் வலைப்பின்னலாக செயலாற்றுவதுடன் அதன் சொந்தப் பிரத்தியேகமான செயற்றிறன்களுடன் ஓர் முழுமையான ஆற்றல் கொண்ட செயலகமாக அபிவிருத்தியடைந்துள்ளது. மனிதநேய அமைப்புகளுக்கான கூட்டமைப்பு, ஓர் வலைப்பின்னல் மையமாக அங்கத்துவக் கோட்பாட்டு நெறிகள், ஒருங்கிணைத்தல் மற்றும் இணைத்தல், பரிந்து பேசுதல் மற்றும் ஆதரித்து வாதாடுதல் போன்ற பணிகளை மேற்கொள்வதுடன் அதன் உறுப்பினர்கள் சார்பில் ஓர் தகவல் மையமாகவும் செயற்படுகின்றது.

 

தன்னார்வப் பணித் தகவல் மற்றும் ஒருங்கிணைப்பு மையம் –“வொய்ஸ்”

தன்னார்வப் பணிகளுக்கு இலங்கையில் இருக்கின்ற வளமான பாரம்பரியத்தை சமூக அபிவிருத்திக்கான பயனுள்ள கருவியாக உருவாக்குவதற்குச் செயற்படும் “வொய்ஸ்” இலங்கையில் ஓர் முன்னணித் தன்னார்வப் பணி ஊக்குவிக்கும் அமைப்பாக இருப்பதற்கான நீடித்த ஆதரவிற்கு இலங்கை அரசாங்கத்தைப் பற்றுறுதி கொள்ளும் வகையில் “வொய்ஸ்” ஓர் சட்ட முறையிலான அமைப்பாக ஸ்தாபிக்கப்படுவதற்கு இட்டுச் செல்லும் சட்டவாக்கச் செய்முறைகளுக்கு வசதியளிப்பதில் வொய்ஸ் செயல் திட்டத்திற்கான ஐக்கிய நாடுகளின் தன்னார்வப் பணி நிறைவேற்றுதல் நிலை ஈடுபடும்.

அத்துடன் இச்செயல் திட்டமானது, வறுமை ஒழிப்பு, பால்நிலைச்  சமத்துவம், இளைஞர் அபிவிருத்தி மற்றும்  சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் என்பவற்றுக்கான ஓர் முக்கியமான பொறிமுறையாக தன்னார்வப் பணியின் அபிவிருத்திக்கான இலங்கை அரசாங்கம் மற்றும் சிவில் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகள் என்பவற்றுக்கிடையிலான கூட்டுச் செயற்பாடுகளை அபிவிருத்தி செய்து வலுப்படுத்தவும் செய்யும்.


சேவைகளின் நியதிகளும் நிபந்தனைகளும்


 



Copyright © 2009 charityapple.org. All rights reserved